நீர் அறம் நன்று ...
தவிச்ச வாய்க்கு கொஞ்சம் தண்ணி வேணும் ! ..
Friday, 22 January 2016
Friday, 16 December 2011
இது கவிதை அல்ல !...
இலக்கியத்தில் உனக்குப்
பிடித்தது கவிதை என்பதால்
இரவெல்லாம் உறங்காமல்
நான் யோசித்து யோசித்து
கிறுக்கிய கிறுக்கல்களே தவிர
இது கவிதையல்ல !
காளிதேவியின் அருளால்
பிடித்தது கவிதை என்பதால்
இரவெல்லாம் உறங்காமல்
நான் யோசித்து யோசித்து
கிறுக்கிய கிறுக்கல்களே தவிர
இது கவிதையல்ல !
காளிதேவியின் அருளால்
கவிபாடியக் காளமேகப்
புலவனைப் போல் உன்
கடைக்கண் பார்வைப்
பட்டதும் நான் பிதற்றிய
பிதற்றல்களே தவிர
இது கவிதையல்ல !
படிக்காமல் தேர்வு எழுதிய
ஒரு பள்ளிச்சிறுவன் போல்
பயந்துகொண்டே உன்னிடம்
சமர்ப்பிக்கிறேன் ..
நீ பிடிக்கவில்லை என்று
பிழை திருத்தம் செய்யவோ,
நன்று! என நலம் பாராட்டவோ
இது ஒன்றும் கவிதையல்ல !
உன் மீது எனக்கிருக்கும்
உணர்வைச் சொல்ல என்
தூக்கத்தைத் தொலைத்து
எழுதியத் தூது சருக்கம் ! ...
நீ பிடிக்கவில்லை என்று
பிழை திருத்தம் செய்யவோ,
நன்று! என நலம் பாராட்டவோ
இது ஒன்றும் கவிதையல்ல !
உன் மீது எனக்கிருக்கும்
உணர்வைச் சொல்ல என்
தூக்கத்தைத் தொலைத்து
எழுதியத் தூது சருக்கம் ! ...
Friday, 1 July 2011
குல சாமி
என்ன தவம் செய்தேனோ !
உன் மகனா நான் பிறக்க
என்ன பாவம் செய்தாயோ !
என்னை நீ ஈன்றெடுக்க …
என்னை நீ கரை சேர்க்க
எத்தனையோ பாடுபட்டும்
என்னதான் சுகத்தக் கண்டே
என்னப்பெத்த ஆத்தாவே ? ! …
கருவரையில் குடியிருக்கும்
கருமாரி சாமிகூட
காரியத்தை நிறைவேத்த
காசு பணம் கேட்கையில
கருச் சுமந்தக் கூலியின்னு
நீ ஒன்னும் கேட்கலையே !
ஒரு பயனும் இல்லையின்னு -நீ
உள்ளூற அறிஞ்சிருந்தும்
உன் உதிரத்தைப் பாலாக்கி
உணவாகத் தந்தாயே !
இதுபோல ஒரு மனசு
யாராத்தா உனக்குத் தந்தா?
உன்னைப் பத்தி ஒரு வார்த்தை
உண்மையாகச் சொல்லப் போனா
கோயிலில கொழுவிருக்கும்
சாமியெல்லாம் சாமியல்ல !
உண்மையான சாமி நீதான்
உயிர்காக்கும் குலசாமி …
Subscribe to:
Posts (Atom)