Saturday 3 December 2011

பாரத மாதா !

பட்டினிச் சாவுகள்
நிகழ்கையிலும் பால் குடிக்கும்
‘கடவுள் சிலைகள்’ 
ஆபுத்திரரின் அமுத சுரபிகளில்
அள்ள அள்ளக் குறையாமல்
‘கண்ணீர்த் துளிகள்’…  

சமதர்மம் பேசிவிட்டு
ஜனநாயகப் புறாவை
சற்று தூக்கலாக நெய் விட்டு
வறுத்து தின்னும் 
‘மங்குனி அரசர்கள்’ 

சங்கம் என்ற சொல்லே
தமிழ்ச்சொல் இல்லை எனத்
தெரிந்தும் சங்கத் தமிழே ! 
என்று அழைப்பதைப் போல்
பெயருக்குப் பின்னால் … ர் … ர்
என்று அழைக்கப்படும்
‘ஜாதிப் பெயர்கள்’  

காக்கிச் சட்டையில் 
வழிப்பறிக் கொள்ளையர்கள்,
கட்டண வழியில் சென்று
சிறப்பு தரிசனம் செய்தாலும்
கண்டுகொள்ளாத 
‘கடவுளர்கள்’ …   

இவை எல்லாவற்றையும்
பார்த்து உள்ளுக்குள் அழும்
ஒரு ஊமச்சிதான் எங்கள்
“பாரத மாதா”